தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிஷம்
அகழ்வாராய்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சுடுமண்னால் ஆன கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 13:29 GMT
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது. முன்னதாக கண்ணாடி மணிகள் கல்மணிகள் மற்றும் பழங்கால செங்கற்கள், சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று உடைந்த நிலையில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சுடுமண்னால் ஆன கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய், சில்வட்டு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் அகழாய்வு தளத்தில் கிடைக்கப்பெறும் தொன்மையான பொருட்கள் தொன்மையான மனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருப்பதற்கான சான்றாக அமைந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.