சாத்தூரில் களை கட்டிய கரும்பு விற்பனை
சாத்தூரில் தைத்திருநாளை முன்னிட்டு கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு புதுமண தம்பதிகளுக்கு திருமண பொங்கல் சீர்வரிசையில் முதலில் இடம் பெறுவது கரும்பு ஆகும். மேலும் தொழிற்சாலைகள் கம்பெனிகள் கடைகளில் தங்களது தொழிலாளர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக முதலாளிகள் கரும்பு பரிசளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மதுரை ,மேலூர் ,பகுதிகளிலிருந்து லாரிகளில் ஏராளமான கரும்பு லோடுகள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.
இறக்கப்பட்ட லோடுகள் சிறு வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களிலும் ஏராளமானோர் கரும்புகளை வாங்கிச் செல்கின்றனர். வசதி படைத்தோர் கரும்பு கட்டுகளாகவும் ஏழைகள் சில்லறை கரும்புகள் ஆகும் வாங்கிச் செல்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த கரும்பு தைத்திருநாள் சிறப்பு விருந்தாக முதலிடத்தில் உள்ளது இந்த கரும்பு வியாபாரம் சாத்தூரில் சிறப்பாக விற்பனை நடைபெற்று வருகிறது. முக்குராந்தல் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கரும்புகளை குவியலாக குவித்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்புடன் சேர்த்து பனங்கிழங்கு, மஞ்சள் குலை, உள்ளிட்ட பொருட்களும் வியாபாரத்தில் சிறப்பிடம் பிடித்துள்ளன.