கடன் தொல்லையால் பெண் தற்கொலை

தென்காசி அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-13 11:51 GMT

தற்கொலை 

தென்காசி மாவட்டம், கடையம் அருகே மயிலப்பபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 35). இவர்கள் தனித்தனியாக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் வீட்டில் ஆள்ளாத நேரத்தில் தமிழ்ச்செல்வி விஷம் அருந்தி மயங்கி கிடந்தார்.

இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் தமிழ்செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கடையும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News