கார் மோதி பெண் படுகாயம்
சேத்துப்பட்டு அருகே பஸ்சுக்கு காத்திருந்த பெண் கார் மோதி படுகாயமடைந்தார்.;
Update: 2024-06-15 15:58 GMT
பெண் படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த உடையான் தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் தனது தாய் வசந்தாவுடன் நெடுங்குணம் கிராமத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென வேகமாக வந்த கார் வசந்தா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வசந்தா சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.