தருமபுரி பத்திரபதிவு அலுவலகத்தில் பெண் திடீர் தர்ணா
பூர்விக சொத்தில் பங்கு வேண்டி தர்மபுரி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி ரேவதி தர்மபுரியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலக கட்டிடத்தின் 2-வது மாடியின் மீது ஏறி நின்று தற்கொலை செய்ய போவதாக மிரட்டினார்.
அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை சமாதானம் செய்து அங்கி ருந்து கீழே அழைத்து வந்தனர். பின்னர் பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில்.ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தர்மபுரி ராஜாபேட்டை பகுதியில் தனது உறவினர்களுக்கு 95 சென்ட் பூர்வீக நிலம் இருப்பதாகவும், அந்த நிலத்தில் தனக்குரிய பங்கை வழங்க வில்லை என்றும்,
அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்வதாக தகவல் கிடைத்ததால் தனக்குரிய பங்கை வழங்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.