உலக முதலீட்டாளர்கள் மாநாடு காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பு

செய்யாறு அருகே சிப்காட் பகுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒட்டி காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Update: 2024-01-08 06:10 GMT

காணொளி காட்சி ஒளிபரப்பு

 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் பகுதியில் சென்னையில் நடைபெறும் உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் காணொளி காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலை உள்ள இடங்களில் ஒளிபரப்பப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட தொழில் முனைவோர் மையம் மற்றும் சிப்காட் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பை சிப்காட் பகுதியில் 11 கம்பெனிகளின் பிரதிநிதிகள் சார் ஆட்சியர் பல்லவிவர்மா மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் தரணிவேந்தன், உள்ளிட்ட நிர்வாகிகள் வெம்பாக்கம் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News