கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்பவர்கள் மீது நடவடிக்கை

ஆட்சியர் எச்சரிக்கை

Update: 2023-07-25 06:08 GMT

ஆட்சியர்

“கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கவும் மத்திய அரசு கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றியுள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு திருச்செங்கோடு உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம் 1998 முதல் செயல்பட்டு வருகிறது.

கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இரகங்களான 1. பேட்டு பார்டருடன் கூடிய சேலை, 2. பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி, 3. துண்டு மற்றும் அங்கவஸ்திரம், 4. லுங்கி, 5. போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, 6. ஜமக்காளம், 7. உடைத்துணி, 8. கம்பளி, 9. சால்வை, 10. உல்லன் ட்வீட் மற்றும், 11. சத்தார்க் ஆகியவைகளை விசைத்தறியில் உற்பத்தி செய்வது சட்டமீறல்களாகும். எனவே இந்த 11 இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்பவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்சமாக ஆறு மாதகால சிறைத் தண்டனையோ அல்லது அதிகபட்சமாக விசைத்தறி ஒன்றுக்கு ரூ.5,000/- அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News