புதுச்சத்திரம் பகுதியில், மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி துவக்கம்

Update: 2023-09-02 08:20 GMT

தொட்டிகள் அமைக்கும் பணி 

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பணிகளை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் கல்யாணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்னதொட்டிபட்டி, கீ.புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தலா 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையெட்டி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கவுதம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார்.புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத்தலைவர் ராம்குமார், பஞ்சாயத்து தலைவர் செல்வி, துணைத் தலைவர் தேன்மொழி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மனோகரன், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் குமார், சட்டசபை தொகுதி மருத்துவர் அணி அமைப்பாளர் சிவக்குமார், வக்கீல் சுகுமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News