வரும் 20 ந் தேதி கால்நடை பராமரிப்புத்துறை ஜீப் ஏலம்

Update: 2023-09-08 09:41 GMT

 ஜீப் ஏலம் 

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை கால்நடை பராமரிப்புத்துறை திருச்செங்கோடு கோட்டம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள மகேந்திரா அண்ட் மகேந்திரா வாகனம் ( Jeep LMV ) வரும் 20-09-2023 அன்று முற்பகல் 11 மணிக்கு அரசு வழிகாட்டுதலின்படி ஏல நிர்ணயக் குழுவினரால் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் வளாகத்தில் வைத்து (குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 22,000 மற்றும் (CGST 9% + SGST 9% ) ஏலம் விடப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News