பிரதமர் மோடி பிறந்தநாள் மக்கள் சேவை வாரமாக கொண்டாப்பட்டம்

Update: 2023-09-25 04:40 GMT

பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு வாரம் மக்கள் சேவை வாரமாக கொண்டாப்பட்டு வருகிறது.நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் N.P.சத்தியமூர்த்தி ஆலோசனை படி எருமப்பட்டி போடிநாயக்கன்பட்டி, ஒன்றியப் பகுதி ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளிலும் மக்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான அரசு நலத்திட்டங்கள் மற்றும் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் சாதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் தெளிவாக எடுத்து கூறப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் R.P.தமிழரசு, எருமப்பட்டி மேற்கு ஒன்றிய தலைவர் சுப்பராமணி, SC அணி மாவட்ட பொதுச்செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல்.குப்புசாமி, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் அகிலன்,, ஒன்றிய கவுன்சிலர் துரைராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் பாஸ்கர், மாவட்ட பொறுப்பாளர் சதீஷ்குமார், ஒன்றிய நிர்வாகிகள் சரண்ராஜ், விஜயன், ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஒன்றிய துணைத் தலைவர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News