ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்
அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் - எம்.பி க்கள் இராஜேஸ்குமார் - சின்ராஜ் - ஆட்சியர் உமா பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ராசிபுரம் கோனேரிப்பட்டி ராசிபுரம் ஆத்தூர் சாலை கொங்கு மண்டபம் எதிரில் ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சி 8 பேரூராட்சிகள் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 523 குடியிருப்புகளுக்கான ரூட் 854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் கே.செல்லமுத்து வரவேற்பு உரை ஆற்றினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறப்புரையாற்றினார். விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, 544 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 12 லட்சத்து 18 ஆயிரத்து 246 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேரூரை ஆற்றினார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பெ.இராமலிங்கம், சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி, திருச்செங்கோடு ஈ.ஆர்.ஈஸ்வரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.சாரதா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மு.செந்தில்குமார், ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பேசுகையில், இத்திட்டமானது மிகப்பெரிய திட்டம். 523 குடியிருப்புகளுக்கு இத்திட்டம் உதவுகிறது. 50 ஆண்டுகளாக நிறைவேற்றப் படாத திட்டங்கள் இராசிபுரம் தொகுதியில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தற்போது நிறைவேற்றி வருகிறது.
நாமக்கல்லில் 100 கோடி மதிப்பீட்டில் பால் பண்ணை , சிப்காட், சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் எந்த துறையில் அமைச்சராக இருந்தாலும், அந்த துறை புதுப்பொழிவு பெறும். இராசிபுரம் நகராட்சியில் கிடப்பில் இருந்த சாலைப் பணிகள் தற்போது நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் மூலமாக இன்னும் 30 ஆண்டு காலம் இராசிபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றார். விழாவில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பேசுகையில், நான் இராசிபுரம் தொகுதியில் மக்களிடம் வாக்கு சேகரித்த போது, இந்த கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி தான் ஓட்டு கேட்டோம். இராசிபுரம் தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் சேந்தமங்கலம், நாமக்கல் தொகுதி மக்களும் இத்திட்டம் மூலம் பயன் பெறுவர்.
206 சாலைப் பணிகள், பூங்கா மேம்பாட்டு பணிகள், புதிய வாரச்சந்தைகள், நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள், அம்ரூ திட்டத்தின் கீழ் நீர்நிலை மேம்பாட்டு பணிகள், வடிகால் கட்டுதல், மழை நிர் வடிகால் பணிகள், தகன மேடை அமைப்புகள் என நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்திடாத பணிகள் நடைபெற்று வருகிறது. 235 சாலைப் பணிகள் இராசிபுரம் தொகுதியில் நடைபெற்று வருகிறது. குட் கிராமங்களிலும், ஒன்றியப் பகுதிகளிலும் இதுவரை நடந்திடாத பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இராசிபுரம் தொகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த ஆட்சிக்கு நன்றி கடன் பட்டுள்ளனர். இந்த கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இனி வரும் காலங்களில் உதய சூரியன் தான் இராசிபுரம் தொகுதியில் மலரும் என்றார்.
விழாவில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு பேசுகையில், இத்திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு, இன்னும் ஒரு வருட காலத்தில் முடிவடையும் வகையில் வேகமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 47 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிதி ஒதுக்கியுள்ளார். ஏற்கனவே
15 ஆயிரம் கோடிக்கு வரும் ஒன்னரை ஆண்டு காலத்தில் நிதி ஒதுக்கப்பட உள்ளது. ஏறத்தாழ 40 ஆயிரம் கோடி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மட்டும் செலவிடப்பட உள்ளது. தமிழகத்தில் 544 இடங்களில் கிணறுகள் அமைத்து நீர் பகிரப்பட்டு வருகிறது. குடிநீர் வீணாகுவதை சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் மறுசுழற்சி பணிகளையும் இந்த துறை செய்து வருகிறது.
ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினை தொடர்ந்து இருப்பதாக தெரிந்ததை அடுத்து, போராடுவதாகவும் அறிவித்திருந்தார்கள். அதை கேள்விப்பட்டு விசாரிக்கும் போது 13 கிணறுகள் பயன்படுத்தாமல் உள்ளது. கிணறுகளை தூர்வாரி குடிநீருக்காக அந்த கிணற்று தண்ணீரை பயன்படுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் ராமநாதபுரம் வரையிலானகூட்டுக் குடிநீர் திட்டம் ரூ. 4000 கோடி மதிப்பில் துவங்கப்பட உள்ளது. அதேபோல் சேலம் நகராட்சிக்கு நகர் மன்ற தலைவராக ராஜாஜி இருந்த காலத்தில் வீரபாண்டி ஏறி வா முழம் தான் சேலம் - ராசிபுரம் வரை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. அந்தத் திட்டத்தை சீர்படுத்தப்பட்டு மீண்டும் செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் அந்தப் பணியும் விரைவில் நிறைவேற்றப்படும்.
அனைத்து துறை சார்ந்த பணிகள் நிறைவேற்றுவதில் தாங்கள் வெறும் கருவி தான், செயல்படுத்துவது அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். அனைத்து துறை சார்ந்த் பணிகளுக்கு அரசானைகள் வெளியிடப்பட்டு விட்டது. தாமிரபரணி பகுதியில் நேற்று கனமழை பெய்து விட்டதால் அதன் சுற்றி உள்ள மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படாது. நாமக்கல் மாவட்டத்தில் எங்கள் துறையில் பலப்பணிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சியில் வன விலங்கியல் பூங்கா அமைத்து தர வேண்டும் என வனத்துறை அமைச்சருக்கு இங்கே கோரிக்கை வைக்கின்றேன் என்றார்.
விழாவில் சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் ராசிபுரம் கே.பி.ஜெகநாதன், வெண்ணந்தூர் பி.தங்கம்மாள், நாமகிரிப்பேட்டை கே.ராஜேந்திரன், புதுச்சத்திரம் வெ.சாந்தி, நாமக்கல் நகர் மன்ற தலைவர் து.கலாநிதி. மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ரா.துரைசாமி, பெ.ராஜேந்திரன், ச.வடிவேலன், அ.ராஜாத்தி, பேரூராட்சி தலைவர்கள் நாமகிரிப்பேட்டை மு.சேகரன், பட்டணம் ரா.போதம்மாள், சீராப்பள்ளி கொ.லோகாம்பாள், ஆர்.புதுப்பட்டி பொ.சுமதி, வெண்ணந்தூர் ஆர்.எஸ்.எஸ்.ராஜேஷ், பிள்ளாநல்லூர் அ.சுப்பிரமணியம், அத்தனூர் ரா.சின்னசாமி, மல்லசமுத்திரம் மு.திருமலை,
அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் - எம்.பி க்கள் இராஜேஸ்குமார் - சின்ராஜ் - ஆட்சியர் உமா பங்கேற்பு
நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், மாநில நிர்வாகிகள் ப.ராணி, சி.ஆனந்தகுமார், முத்துவேல் இராமசுவாமி, மாவட்ட பொருளாளர் ஏ.கே.பாலச்சந்திரன், அரசு வழக்கறிஞர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் நலங்கிள்ளி. தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுசிதரன், காளியப்பன், நகர செயலாளர்கள் என்.ஆர்.சங்கர், ராணா ஆர். ஆனந்த், அ.சிவக்குமார், எஸ்.பூபதி, ஒன்றிய கழக செயலாளர்கள் அ.அசோக்குமார், கே.பி.இராமசுவாமி, ஆர்.எம்.துரைசாமி, பெ.நவலடி, கே.பி.ஜெகநாதன், பாலசுப்பிரமணியன், எம்.பி.கௌதம், வி.கே.பழனிவேல். ஜெயபிரகாஷ், செந்தில் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சேலம் - நாமக்கல் வட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சி.மதியழகன் நன்றி கூறினார்.