விரைவில் கே பி முனுசாமி குறித்த வீடியோ வெளியிடப்படும் - ஓபிஎஸ் அணி
அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணி மாவட்ட செயலர் கொளத்துார் கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு பத்திரிகையாளர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, அ.தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சம்பந்தமாக ஆடியோ ஒன்றை வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாக கூறி, அந்த ஆடியோவை வெளியிடவில்லை. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தொடர்ந்து கே.பி.முனுசாமி, ஓ.பி.எஸ்., குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவர் ஓபி.எஸ்., குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்கக்கூடும் ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியிட்டு பொன்னையன் தற்போது அவர் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார். அதேநிலை விரைவில் முனுசாமிக்கும் வரலாம். எனவே அவர் ஓ.பி.எஸ்., குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தி.மு.க.,வின் பி டீம் ஆக செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் எங்களை பீ டீம் ஆக செயல்படுவதாக கூறுகின்றனர். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. எனவே கே பி முனுசாமி ஓபிஎஸ் குறித்த பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் அவரது வீடியோ விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.