முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.;

Update: 2025-07-31 12:55 GMT

ops

ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். காலை நடை பயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருந்தார். அப்போது முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார். இதனிடையே பிரதமர் மோடி சந்திக்க மறுத்த நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து பன்னீர்செல்வம் அணி விலகியது. பாஜக கூட்டணியில் இன்று பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில் திமுக தலைவருடன் சந்தித்து பேசி வருகிறார். ஒரே நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் சந்தித்து பேசி வருகிறார். முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வத்துடன் சென்றுள்ளனர். முதல்வர்- பன்னீர்செல்வம் சந்திப்பில் உதயநிதி, ஓபி ரவீந்திரநாத் உடன் உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஏற்கனவே பிரேமலதா, எல்.கே.சுதீஷ் நலம் விசாரித்திருந்தனர். காலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, முதலமைச்சரை சந்தித்த நிலையில் தற்போது ஓபிஎஸ் சந்தித்துள்ளார். மாற்று அணியில் இருப்பவர்கள் அடுத்தடுத்து முதலமைச்சரை சந்திப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News