மதுரையில் அதிக சாதிய வன்கொடுமை: திருமாவளவன்

மிகஅதிகமான சாதிய வன்கொடுமைகள் நடக்கின்ற மாவட்டங்களில் மதுரை மாவட்டம் முதலிடத்திலே இருப்பதாக புள்ளி விவரங்கள் இருக்கின்றன என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.;

Update: 2025-09-06 07:40 GMT

thiruma

மிகஅதிகமான சாதிய வன்கொடுமைகள் நடக்கின்ற மாவட்டங்களில் மதுரை மாவட்டம் முதலிடத்திலே இருப்பதாக புள்ளி விவரங்கள் இருக்கின்றன என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில், “மதுரையில் தம்பி இராமகிருஷ்ணனுக்கு வீரவணக்கம் செலுத்தினேன்! அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 75,000 நிதி வழங்கினேன்! மிகஅதிகமான சாதிய வன்கொடுமைகள் நடக்கின்ற மாவட்டங்களில மதுரை மாவட்டம் முதலிடத்திலே இருப்பதாக புள்ளி விவரங்கள் இருக்கின்றன. பதிவான வழக்குகளிலிருந்து முதல் இடத்தை வகிக்கிறது, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. காவல்துறையினரே முடிந்த அளவிற்கு வன்கொடுமை தொடர்பான வழக்குகளை FIR போடாமலே புறந்தள்ளிவிடுகிறார்கள். மதுரை மாவட்டத்தை சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ராமகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொழிற்சங்கத்தின் உறுப்பினர் . அந்த தொழிற்சங்கத்துக்குள் நடந்த தேர்தலில் திமுகவிலேயே இரண்டு மூன்று அணிகளாக பிரிந்து தேர்தலை சந்தித்திருக்கிறார்கள். அதிலே இவர் நின்ற பொறுப்பிற்கு எதிர் அணிலே இருந்தவர் தோற்கும் நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த தேர்தலில் என்ன தில்லுமுல்லு நடந்திருக்கிறது என்று தெரியாது. ஆனால் அவரால் இவருக்கு பல இடையூறுகள் தொல்லைகள் அச்சுறுத்தல்கள் இருந்ததாக அவருடைய மனைவி சொல்லுகிறார் அவருடைய தந்தை குருசாமியும் சொல்லுகிறார். ஆகவே இந்த மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை கொலையாக தான் இருக்கும் என்று குடும்பத்தினர் வலுவாக சந்தேகப்படுகிறார்கள். அதனையொட்டி தான் உடனடியாக நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற தடய அறிவியல் மருத்துவர்கள் இரண்டு பேர் கொண்ட குழு பிணக்கூராய்வு செய்ய வேண்டும் postmortem செய்ய வேண்டும் என்கிற ஆணையை பிறப்பித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே இன்னும் சிறிது நேரத்தில் பிணக்கூராய்வு நடைபெறவுள்ளது. இந்த வழக்கை வழக்கமான காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது, சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இது தொடர்பாகவும் நாங்கள் நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டு இருக்கின்றோம். நான் ஏற்கனவே பலமுறை முதல்வரிடம் கூறி இருக்கிறேன் தொடர்ந்து பல பத்தாண்டுகளாக கூறி வருகிறேன் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கிற வன்கொடுமைகளை முன்கூட்டியே அறிவதற்கு ஏற்ப புலனாய்வுத்துறை இதற்கென்று தனி உளவுத்துறை தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் இது போன்ற நடவடிக்கைகளை ஓரளவுக்கு தடுக்க முடியும். ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தை அதாவது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே மிகப்பெரிய தேக்கமிருக்கிறது. முடிந்த வரையில் காவல்துறையினர் வழக்குகளை பதிவே செய்வதில்லை. கொலை வழக்குகளை பெரும்பாலும் 174 CRPC என்று போட்டு அது BNS க்கு 194 என்று மாற்றப்பட்டிருக்கிறது. அந்த வழக்காக பதிவு செய்து பின்னால் தற்கொலை என்றே மூடி விடுகிறார்கள். இது போன்ற நிலை இருப்பது உள்ளபடியே கவலை அளிக்கிறது. எனவே, சாதிய வன்கொடுமை என்றால் அதில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வகையில் அரசு பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். தீவிரமாக செயல்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News