இளைஞர் அணி மாநாட்டில் சீருடையுடன் 10 ஆயிரம் பேர்

சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டில் 10 ஆயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்க முடிவு

Update: 2023-12-08 04:48 GMT

சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டில் 10 ஆயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்க முடிவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு, சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை.எம்.பி. தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 42 லட்சம் பேர் வருகை தந்த திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் எந்த சிறு அசம்பாவிதமும் நடைபெறாமலும், ஆன்மீகப் பெருமக்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள் குடி தண்ணீர், கழிப்பிட வசதி, தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள், ஆன்மீகப் பெருமக்கள் மலைவலம் வரவும், அண்ணாமலையார் திருக்கோவிலில் தரிசனம் செய்திடவும் மற்றும் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை சிறப்பாக செய்து தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரை பாராட்டி தீர்மானம் நிறைவேறியது. சேலத்தில் 17-ந்தேதி நடக்கும் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கு, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து 10ஆயிரம் இளைஞர்கள் சீருடையுடன், எழுச்சியுடன் கலந்துகொள்வது எனவும், நாடாளுமன்றத்தேர்தலில் நாற்பதும் நமதே என்ற வகையில் வெற்றியடைய மாவட்ட கழகம், இளைஞர் அணிக்கு இடும் தேர்தல் பணிகளை இரவு, பகல் பாராது கடுமையாக உழைத்து வெற்றிக்கனியினை தந்திடுவோம் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைசபாநாயகர் கு.பிச்சாண்டி, வட மாநில மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, சரவணன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் ராஜாங்கம் நன்றி கூறினார்.
Tags:    

Similar News