2 ஜி வழக்கு டேப் : திமுகவினர் பதில் சொல்ல வேண்டும் - அண்ணாமலை

கண் துடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் 2ஜி வழக்கு, நான் அளிக்க உள்ள டேப்பிற்க்கு திமுகவினர் பதில் சொல்ல வேண்டும், மக்கள் மன்றத்தில் 9 டேப்கள் வெளியிடப்படும், மக்கள் முடிவு எடுத்து கொள்ளட்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2024-01-19 03:38 GMT

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு 

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் திமுகவின் பல்லாவரம் தொகுதி எம்.எல். ஏ.மகனின் வீட்டில் பணிபுரிந்த வீட்டு பணிப்பெண் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார் எனவும் சமூக நீதி பேசும் திமுக வின் ஆட்சியில் உள்ள எம்.எல். ஏ.மகன் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றார்.

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள பிரதமர் தமிழகம் வருவதாகவும் ஒரே மாதத்தில் 2வது முறையாக தமிழகத்திற்கு வருவதாக கூறியவர் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்திக்கு ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதாகவும் 11 நாள் சிறப்பு வழிபாடாக ராமருக்கு தொடர்புடைய இடங்களுக்கு செல்வதாகவும் அதன்படி பிரதமர் நாளை மற்றும் நாளை மறுநாள் ஶ்ரீ ரங்கம் சென்று பின்னர் ராமேஸ்வரம் செல்வதாக தெரிவித்தார்.அயோத்தியா செல்வதற்கு முன் தமிழகம் வருகை புரியும் பிரதமர் ஶ்ரீரங்கம்,ராமேஸ்வரம் கோதாண்டாரமன் சுவாமி செல்வதாக கூறியவர் இதன் மூலம் தமிழகம் மீது பிரதமருக்கு உள்ள அன்பை பார்க்க முடிவதாகவும் அவரை வாழ்த்தி வழியனுப்ப தமிழக மக்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 3 நாட்களாக விழா விடுமுறை என அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுத்துள்ளதாகவும் தமிழகத்தில் விடுமுறை இல்லை என்றாலும் மக்கள் கொண்டாட வேண்டும் என்றார்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதலின் படி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதாகவும் முதல் பத்திரிக்கையை அங்குள்ள இஸ்லாமியருக்கு தான் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஆளுநர் என்பவர் மாநில அரசு சொல்வதெல்லாம் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்க முடியாது எனவும் அரசியலமைப்பு சட்டதிற்கு உட்பட்டு தான் செயல்பாட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது எனவும் வரம்பு மீறி செயல்பட்டதாக கூறவில்லை என்றார்.கண் துடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் 2ஜி வழக்கு என்றவர். நான் அளிக்க உள்ள டேப்க்கு திமுகவினர் பதில் சொல்ல வேண்டும் என்றவர் மக்கள் மன்றத்தில் 9 டேப் வைக்கபடும் இதனை மக்கள் முடிவு எடுத்து கொள்ளட்டும் என்றார்.

தன்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களில் 30% நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் 70% நிவர்த்தி செய்யவில்லை என்றவர் 17% மத்திய அரசு சார்ந்தது 83% மாநில அரசு சார்ந்தது என்பதால் நிவர்த்தி செய்வதில் தாமதமாவதாக தெரிவித்தார்.பதவி ஆசை இருப்பவர்கள்,குற்றம் சொல்ல அவர்களுக்கு (அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்) தகுதியில்லை என்றவர் பாஜகவினர் கொள்கைக்காக இருப்பதாகவும் பதவிக்காக இல்லை என்றவர் ஒரு கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறுபவர்கள் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

குடும்பத்தில் பிறந்தால் தான் தலைவன் என்பது திமுகவின் நிலை அவர்களுக்கு பாஜக பற்றி புரியாது என்றவர் பிரதமர் மோடி தான் மீண்டும் வருவார் என்றவர் மக்கள் மத்தியில் பெரிய அலைகள் ஏற்படும் என தெரிவித்தார்.38 மாதம் ஆட்சியில் இருந்துக்கொண்டு இதை செய்ததாக திமுகவிற்கு தைரியம் இல்லை எனவும் பலமுறை மத்தியில் இருந்துள்ள திமுக அப்போது மாநில உரிமையை பற்றி பேசி உள்ளனரா? என கேள்வி எழுப்பினார்.அடுத்த 3 வாரங்களில் திமுக குறித்த அனைத்து டேப்பும் வெளியிடப்படும் என அண்ணாமலை எச்ச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News