அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி - எடப்பாடி பழனிசாமி

வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2023-12-31 08:29 GMT

திருச்சி  புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரின்ஸ் எம். தங்கவேல் மறைவையொட்டி, முசிறியில் உள்ள அவரது இல்லத்தில் பிரின்ஸ் எம். தங்கவேல் படத்துக்கு அஞ்சலி செலுத்திய அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். சென்னை, தென் மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். அதிமுக செய்திகளை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. தமிழக மக்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின், அதனைக் கருத்தில் கொள்ளாமல் திமுக சாா்பில் இந்தியா கூட்டணியில் பங்கேற்பதற்காக தில்லி சென்று விட்டாா்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தி முதலீடு ஈா்க்கப்பட்டது. ஏற்கெனவே ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாடால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. தற்போது மேலும் நடைபெற உள்ள முதலீட்டாளா்கள் மாநாடால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. திமுக ஆட்சி அமைந்தபிறகு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. மழை, வெள்ளத்தால் இடிந்துவிழுந்த முக்கொம்பு கொள்ளிடம் பாலம் அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிதாக கட்டப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் அதிகாரப்பூா்வமாக பாலத் திறப்பு விழா நடைபெறவில்லை எனக் குற்றஞ்சாட்டினாா். அப்போது, முன்னாள் அமைச்சா்கள் தங்கமணி, பரஞ்சோதி, என்.ஆா்.சிவபதி, எம்.ஆா்.விஜயபாஸ்கா், வளா்மதி, முன்னாள் எம்.பி. ப.குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News