ராசிபுரம் நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம்.

ராசிபுரம் நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம்.

Update: 2023-12-19 16:20 GMT

ராசிபுரம் நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னாள் முதல்வர், கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, அவர்களின் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் மாவட்ட கழக செயலாளருமான பி.தங்கமணி, அவர்களின் ஆலோசனை படியும் ராசிபுரம் நகர கழகச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தல் படி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் ராசிபுரம் 15 வார்டு பகுதியில் வார்டு அவைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொருளாளர் கோபால், முன்னிலையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள் படிவம் சரி பார்க்கப்பட்டு அனைவரும் முறையாக செயல்படுகிறார்கள் என பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்தில் சரிபார்க்கப்பட்டது. இந்த நிகழ்வில் 15 வார்டு செயலாளர் ராசி ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.சீனிவாசன், ஆர்.சி.எம்.எஸ்.சக்தி, முன்னாள் வார்டு செயலர் சி.மோகன், வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News