ஒரே நாடு ஒரே தேர்­தல் ! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் !

Update: 2024-12-13 09:31 GMT

மு.க.ஸ்டாலின் 

ஒரே நாடு ஒரே தேர்­தல் சட்ட முன்­வ­டி­விற்கு ஒன்­றிய அமைச்­ச­ரவை நேற்று ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. அடுத்த வாரம் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் இந்த சட்ட முன்­வ­டிவு அறி­மு­கப்­ப­டுத்­த­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.


இந்­நி­லை­யில் இந்த சட்ட முன்­வ­டி­விற்கு கழ­கத் தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தமது கடும் எதிர்ப்பை தெரி­வித்து சமூக வலை­த­ளப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.இந்­தி­யா­வில் நாடா­ளு­மன்­றம் மற்­றும் மாநில சட்­டப்­பே­ர­வை­க­ளுக்கு ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை தேர்­தல் நடத்­தப்­ப­டு­கி­றது. ஒவ்­வொரு சட்­ட­மன்­றத்­தின் பத­விக்­கா­லம் முடி­வ­டை­யும் காலத்­திற்கு ஏற்ப தேர்­தல் நடை­பெ­று­கி­றது.

இத­னால், அடிக்­கடி தேர்­தல் நடை­பெ­று­வ­தால் மக்­கள் நலத்­திட்­டங்­களை செயல்­ப­டுத்த முடி­ய­வில்லை எனக் கூறிய ஆளும் பாஜக அரசு நாடு முழு­வ­தும் ஒரே நாடு ஒரே தேர்­தல் திட்­டத்தை செயல்­ப­டுத்த முனைப்பு காட்டி வரு­கி­றது. ஒரே நாடு ஒரே தேர்­தல் மசோதா நடப்பு நாடா­ளு­மன்ற குளிர் கால கூட்­டத் தொட­ரில் தாக்­கல் செய்ய ஒன்றிய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது. இதில் பல சவால்­கள் உள்­ளன!

ஒரே நாடு ஒரே தேர்­தல் தொடர்­பாக பல்­வேறு சாதக பாதக அம்­சங்­கள் கூறப்­ப­ட்டா­லும், இதை அமல்­ப­டுத்­து­வ­தில் பல சவால்­கள் உள்­ளன. ஒரே நாடு ஒரே சட்­டத்தை அமல்­ப­டுத்த அர­சி­யல் அமைப்­பில் திருத்­தம் கொண்டு வர வேண்­டி­யது அவ­சி­யம். நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பங்கு மெஜா­ரிட்டி இருந்­தால்­தான் இதை நிறை­வேற்ற முடி­யும். அது மட்­டும் இன்றி நாட்­டில் உள்ள மொத்த மாநி­லங்­க­ளில் பாதிக்­கும் மேற்­பட்ட மாநி­லங்­கள் இதை ஏற்­றுக்­கொண்டு ஒப்­பு­தல் அளிக்க வேண்­டும். அர­சி­யல் அமைப்பு சட்­டம் பிரி­வு­கள் 83, 85(2)b, 174, (2) (B), 356 மற்­றும் 75(3) ஆகி­ய­வற்­றில் திருத்­தம் செய்ய வேண்­டும். மக்­கள் பிர­நி­தித்­துவ சட்­டம் 1951-லும் முக்­கிய திருத்­தங்­கள் செய்ய வேண்­டி­யது அவ­சி­யம்.

நடை­முறை மற்றும் சிக்­கல்­கள்!

அது­மட்­டும் இன்றி நாடு முழுக்க ஒரே நேரத்­தில் தேர்­தல் நடத்த வேண்­டும் என்­றால் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் பெரு­ம­ள­வில் தேவைப்­ப­டும். பாது­கா­வ­லர்­கள் எண்­ணிக்­கை­யும் அதி­கம் தேவைப்­ப­டும். இது­போன்ற பல்­வேறு நடை­முறை சிக்­கல்­கள் உள்­ளன. இந்த மசோதா நிறை­வேறி எல்­லாம் சரி­யாக நடந்­தால் அடுத்த 2029-–ல் ஒரே நாடு ஒரே தேர்­தல் நடத்­தப்­பட வாய்ப்­புள்­ளது. ஆனால் தற்­போ­தைய பா.ஜ.க. கூட்­டணி அர­சுக்கு நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பங்கு பெரும்­பான்மை இல்லை என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

- முதல்­வர் மு.க.ஸ்டாலின்

கடும் எதிர்ப்பு!

இந்­நி­லை­யில் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் வெளி­யிட்­டுள்ள பதி­வில், இந்­திய ஜன­நா­ய­கத்­தின் மீதான இத்­தாக்­கு­தலை நம் ஆற்­றல் அனைத்­தை­யும் ஒன்று திரட்டி எதிர்ப்­போம் என்று குறிப்­பிட்­டுள்­ளார். ‘ஒரே நாடு ஒரே தேர்­தல்’ சட்­ட­முன்­வ­டிவை நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய ஒன்­றிய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் சமூக வலை­த­ளப் பதிவு செய்துள்ளார் 

கொடுங்­கோன்­மைக்கு வழி­வ­குக்­கும், ‘ஒரே நாடு ஒரே தேர்­தல்’ சட்­ட­முன்­வ­டிவை நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய ஒன்­றிய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

நடை­மு­றைக்கு ஒவ்­வாத, மக்­க­ளாட்­சிக்கு எதி­ரான இந்த நட­வ­டிக்கை மாநி­லங்­க­ளின் குரலை அழித்­து­வி­டும்; கூட்­டாட்­சி ­யி­ய­லைச் சிதைத்­து­வி­டும் ; அர­சின் ஆட்சி நிர்­வா­கத்­துக்­குத் தடை­யினை ஏற்­ப­டுத்­தும்.

எழுக இந்­தியா!

இந்­திய ஜன­நா­ய­கத்­தின் மீதான இந்­தத் தாக்­கு­தலை நம் ஆற்­றல் அனைத்­தை­யும் ஒன்று திரட்டி எதிர்ப்­போம்!

இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்  இதை தனது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

Tags:    

Similar News