அனைத்து கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்கக் கூடாது: மு.க.ஸ்டாலின்
அனைத்து கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2025-03-03 07:26 GMT

CM Stalin
நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதில் எந்த கட்சியும் கவுரவம் பார்க்க வேண்டாம். கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்க கூடாது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை பறிக்க பார்க்கிறது பா.ஜ.க. பிள்ளைப்பேற்றை தள்ளிப்போடாமல் குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள். மக்கள்தொகை அதிகரித்தால் தான் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும் என்று திருமண விழாவில் மணமக்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.