கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் மாநாட்டிற்கு தடையை உடைத்த நீதிமன்றம்

கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் மாநாட்டிற்கு தடையை உடைத்த நீதிமன்றம்

Update: 2024-02-10 06:30 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பைபாஸ் சாலையில் விஜயமங்கலம் டோல்கேட் அருகில் வருகிற 18-2-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொங்குநாடு வேட்டு கவுண்டர்கள் சமூக நீதி மாநாட்டை நடத்த அனுமதி வழங்கியும், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

இது குறித்து புதிய திராவிடர் கழகம், கொங்குநாடு வேட்டு கவுண்டர்கள் இளைஞர் நலச் சங்கம் நிறுவனரும், தமிழ்நாடு அரசு சீர் மரபினர் நல வாரிய உறுப்பினருமான கே.எஸ்.ராஜ் கவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நல சங்கம் மற்றும் புதிய திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் தலைமையில் அனைத்து சமுதாய தலைவர்களையும் ஒருங்கிணைத்து கொங்குநாடு வேட்டு கவுண்டர்கள் சார்பில் கொங்கு நாட்டின் சமூக நீதி 5 வது மாநில மாநாடு நாளை 11.2.2024 அன்று ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை திடலில் சமூகநீதி மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கடந்த ஆறு மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த 6-2-2024 அன்று ஈரோடு மாவட்ட காவல்துறை மாநாட்டிற்கு அனுமதி மறுத்து விட்டது.

கொங்கு மண்டலத்தை பொறுத்த வரை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு மாநாடு மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறை எவ்வித நிபந்தனையும் இன்றி அனுமதி வழங்கி வரும் நிலையில், சமூக நீதி ஆட்சியில் சமூக நீதி கூட்டணியில் இணைந்து செயல்படுகின்ற கட்சிகள், அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்துகின்ற சமூக நீதி மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் சமூக நீதி மாநாட்டிற்கு அனுமதி வழங்க கோரி அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று 9- 2-2024 அன்று நடந்த வழக்கு விசாரணையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பைபாஸ் சாலையில், வருகிற 18 -2-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சமூக நீதி மாநாட்டை நடத்த அனுமதி வழங்கியும், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பையடுத்து வருகிற 18 -2- 2024 ஞாயிற்றுக்கிழமை பெருந்துறை பைபாஸ் சாலையில் விஜயமங்கலம் டோல்கேட் அருகில் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் சமூக நீதி மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது. அனைத்துக் சமூகத் தலைவர்களும், அமைச்சர் பெருமக்களும் கலந்து கொள்ளுகின்றனர். இம்மாநாட்டில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே நாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து நாளை 11- 2- 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் வேட்டுவ கவுண்டர் சமூகம் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி கட்டி நமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News