பாபநாசம் ஒன்றியத்தில் காலை உணவு திட்டம் குறித்து கலந்துரையாடல் கூட்டம்
பாபநாசம் ஒன்றியத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 15:21 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் கல்வியாண்டில் இருந்து காலை உணவு திட்டம் அமல்படுத்துவது குறித்து பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் சத்துணவு பிரிவு நேர்முக உதவியாளர் தியாகராஜன் கலந்துகொண்டு திட்டங்கள் அமல்படுத்தல் குறித்து விளக்கம் அளித்து பேசினார் கூட்டத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார்,
கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் மற்றும் பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள உதவி பெறும் தொடக்கப்பள்ளி தாளாளர்கள் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.