கூச்சலால் எழுந்த மோதல்... பா.ஜ.க இளைஞரணி தலைவரை தாக்கிய தி.மு.க ஆதரவாளர்கள்? விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
கூச்சலால் எழுந்த மோதல்... பா.ஜ.க இளைஞரணி தலைவரை தாக்கிய தி.மு.க ஆதரவாளர்கள்? விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன?;
பத்தரிக்கையாளர் என்று கூறி வரும் செந்தில்வேல் பேசும்போது பா.ஜ.க தரப்பில் கேலி கிண்டல் செய்யப்பட்டதாகவும், இதனால் கோபமான செந்தில்வேல் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மக்கள் சபை நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில், பத்திரிக்கையாளர் என்ற அடிப்படையில் கலந்துகொண்ட செந்தில்வேல் பேசும்போது பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் கிண்டல் செய்ததாகவும், இதனால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய செந்தில்வேல், படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு 50க்கு மேற்பட்டோருடன் வந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் களம சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு டிவி சேனல்களும், அரசியல் பிரபலங்கள், ஒவ்வொரு கட்சியின் பேச்சாளர்களை அழைத்து விவாத நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில், மக்கள் சபை என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசியல் கட்சிகளின் பேச்சாளர்கள் பேசுவது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்கின்றனர்.
அந்த வகையில் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக, மக்கள் சபை நிகழ்ச்சியின் படப்பிடிப்பு எழும்பூரில் உள்ள தந்தி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பத்தரிக்கையாளர் என்று கூறி வரும் செந்தில்வேல் பேசும்போது பா.ஜ.க தரப்பில் கேலி கிண்டல் செய்யப்பட்டதாகவும், இதனால் கோபமான செந்தில்வேல் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல நிகழ்ச்சி முடிந்தவுடன் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும், செந்தில்வேல் 50-க்கு மேற்பட்டோருடன் வெளியில் காத்திருக்கிறார் என்று கூறியதாகவும் நாம் தமிழர் கட்சியின் இடும்பானவம் கார்த்திக் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், செந்தில்வேல் வெளியேறியப் பிறகும், நிகழ்ச்சி தொடர்ந்தது. திமுகவின் தங்க.தமிழ்ச்செல்வன் பேசும்போதும் பாஜகவினர் கேலி, கிண்டல் செய்தனர். அவர் எதிர்வினையாற்றியதும் அடங்கினர். அதன்பிறகு, 1 மணிநேரம் வரை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்தப் பிறகு, வெளியில் செல்ல வேண்டாம் என எல்லோரும் அறிவுறுத்தப்பட்டார்கள். என்னவென்றால், 50க்கும் மேற்பட்டரோடு செந்தில்வேல் வெளியில் நிற்கிறார். வன்முறை ஏற்படும் சூழல் இருக்கிறதெனக் கூறினார்கள்.