கனிமொழி பிரச்சார வாகனத்தை மீண்டும் பறக்கும் படை சோதனை
தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை இதுவரை 6-முறை தேர்தல் பறக்கும் படையினர் கனிமொழி வாகனத்தை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் அருகில் கனிமொழியின் பிரச்சார வாகனத்தைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனைக்குக் கனிமொழி கருணாநிதி முழுமையாக ஒத்துழைத்தார். அவரது பிரச்சார வாகனத்தில் பணமோ, பொருட்களோ எதுவும் இல்லை. தீவிர சோதனைக்குப் பிறகு பிரச்சாரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கனிமொழி கருணாநிதி வாகனத்தை இதுவரை தேர்தல் பறக்கும் படையினர்6-முறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடதக்கது.