திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ரூ.12 லட்சம் ராஜேஸ்குமார் எம்.பி வழங்கினார்
திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ. 12 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இராஜேஸ்குமார் எம்.பி வழங்கினார்
சேலம் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டிற்காக, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ. 12 லட்சம் நிதியை, மாவட்ட செயலாளர் இராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள பெத்தநாய்க்கன்பாளையத்தில் வருகிற 24ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை, தி.மு.க இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை மாநில உரிமை மீட்பு மாநாடு என்று தி.மு.க. இளைஞரணி அறிவித்துள்ளது. லட்சக்கணக்கான தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்கள், தி.மு.க. தொடர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டையொட்டி, தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளார். 2024 பார்லிமெண்ட் தேர்தலுக்கு அச்சாரமாக இந்த மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு வந்தார். அவரை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ராஜேஷ்குமார் தலைமையில், கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத் நேரில் சந்தித்து, சேலம் மாநாட்டு நிதியாக ரூ. 12 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், ரமேஷ்குமார், கலைவாணன், பிரபாகரன், கார்த்திக் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.