உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் தங்க மோதிரம் அணிவித்தார்.
கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு தங்கமோதிரம் அணிவிப்பதாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் அறிவித்திருந்தார். அதன்படி சிறுமொளசி சமத்துவபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் - வனிதா தம்பதியருக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
திருச்செங்கோடு ஒன்றியம் சிறுமொளசி சமத்துவபுரத்தை சேர்ந்த அக்குழந்தைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்களது இல்லம் தேடிச் சென்று குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் வட்டூா் ஜி.தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி (எ) ராஜவேல், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மல்லை ஜெகதீஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.