அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
அதிமுகவினர் சார்பாக தமிழகத்தில் ஊடுருவியுள்ள போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-12 10:45 GMT
மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு துணை போன திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் எனபவருடன் நெருங்கி பழகிவரும் முதலமைச்சர் மகன் உதயநிதி ஸ்டாலின் குடும்பம் மற்றும் தொடர்பில் உள்ள திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும்,
தமிழகத்தில் போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது, போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி பெரியகுளம் தென்கரை காந்தி சிலை பகுதியில் அதிமுகவினர் நூற்றுக்கும் 100க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.