விழுப்புரத்தில் பா.ஜ.,வில் சமத்துவ மக்கள் கட்சியினர் இணைந்தனர்
விழுப்புரத்தில் பா.ஜ., மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் முன்னிலையில், 5 மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியினர் பா.ஜ.,வில் இணைந்தனர்.
விழுப்புரத்தில் பா.ஜ., மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் முன்னிலையில், 5 மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியினர் பா.ஜ.,வில் இணைந்தனர். தமிழகத்தில் நடிகர் சரத்குமார் தலைமையில் செயல்பட்டு வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பா.ஜ.,வுடன் இணைந்துள்ளது.
இதனையடுத்து, அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் பா.ஜ., நிர்வாகிகளுடன் சந்தித்து, கட்சியை இணைத்துக்கொண்டுள்ளனர். இதன்படி, விழுப்புரத்தில் நேற்று பா.ஜ., மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் முன்னிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் மண்டல பொதுச்செயலாளர் செந்தில்முருகன் தலைமையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, முறைப்படி பா.ஜ.,வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அவர்களை சால்வை அணிவித்து பா.ஜ.,வினர் வரவேற்றனர். பா.ஜ., நகர தலைவர் வடிவேல்பழனி, ஒன்றிய தலைவர் தென்னரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.