கொங்கு நாட்டின் சமூகநீதி மாநாடு 5 வது மாநில மாநாடு
விஜயமங்கலத்தில் கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம், புதிய திராவிடகழகம் இணைந்து நடத்தும் கொங்குநாட்டின் சமூகநீதி மாநாடு 5 வது மாநில மாநாடு நடைபெறுகிறது.
கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம், தமிழ்நாடு மற்றும் புதிய திராவிடகழகம் இணைந்து நடத்தும் கொங்குநாட்டின் சமூகநீதி மாநாடு 5 வது மாநில மாநாடு இன்று 18-02-2024 அன்று விஜயமங்கலம் டோல்கேட் அருகில் நடைபெற உள்ளது. மாலை 3 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சியில் முதல்கட்டமாக வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. தொடர்ந்து 5 மணிக்கு கழக கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் சங்க மாநிலத் தலைவர் ஆர் கணேசன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சௌந்தர்ராஜ், மாநில கலை மற்றும் இலக்கிய பிரிவு தலைவர் சலங்கை துறை, கொங்கு மண்டல தலைவர் டைட்டானிக் தர்மா, மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குமார், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகதீசன், ஈரோடு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் சதீஷ்குமார், நாமக்கல் மாவட்ட தலைவர் அருணாச்சலம், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் காடையார் சரவணன், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சர்மா, நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ், கரூர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், கரூர் மாவட்ட செயலாளர் பசுவை சந்தோஷ், தொண்டை மண்டல ஒருங்கிணைப்பு தலைவர் வழக்கறிஞர் செந்தில்,
திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜாமணி, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, சேலம் மாவட்ட செயலாளர் தங்கவேல் கவுண்டர், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாலு, கௌரவத் தலைவர் கணேசன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் கார்த்திக், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், சேலம் மாவட்ட தலைவர் முருகேசன், சேலம் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேஷ் கவுண்டர், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மணி, சுபாஷ், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி சசிகுமார், காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் திம்மராஜு , கிருஷ்ணகிரி மாநகர தலைவர் வடிவேல், மாநகர செயலாளர் ஐயப்பன், கடலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் நீலகண்டன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி குணா, ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ், ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் தங்கராஜ், சத்தியமங்கலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், மாவட்ட செய்தி தொடர்பாளர் ரவி வேடன், மாவட்ட இணை செய்தி தொடர்பாளர் கைலாசமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலு ,பவானி ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பெருந்துறை ஒன்றிய செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி, கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரசாந்த், கோபி கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகு, நம்பியூர் ஒன்றிய செயலாளர் நித்தியானந்தன், பவானிசாகர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தினகரன், பவானிசாகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் அருண் ஆகியோர் வரவேற்கின்றனர்.
மாநாட்டில் மாலை 6:00 மணிக்கு பட்டதாரி மாணவ, மாணவியர்களை ஊக்குவித்து பாராட்டுதல் மற்றும் பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு தேசிய மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களை பாராட்டி பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும், 6:30 மணிக்கு வரலாற்று ஆய்வாளர்களை பாராட்டி கௌரவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களுடனும் நடைபெறும் இம்மாநாட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சு.முத்துசாமி, திமுக துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் ப.செல்வராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உயர்கல்வித்துறை அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான கண்ணப்பன், வனத்துறை அமைச்சர் மருத்துவா் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், ஈரோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவருமான இ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், மாநில இளைஞரணி துணை செயலாளர் கே.இ.பிரகாஷ் ஆகியோர் தலைமை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
தொடர்ந்து நடைபெறும் இம்மாநாட்டில் அரசியல் வியூக வகுப்பாளர் ரவீந்திரன் துரைசாமி, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணி தலைவர் ஆர்.வி.பரதன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் ஜி, விடுதலை களம் கட்சி நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநிலத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், கண்ணகி குல செட்டியார்கள் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் பாபு பத்மநாபன், தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார், மதுரை தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் தங்கராஜ், அகில இந்திய சான்றோர் மக்கள் கழக தலைவர் சதா நாடார், மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன், தமிழ்நாடு வண்ணார் பேரவை நிறுவனத் தலைவர் மணி பாபா, தமிழக வீர சைவ முன்னேற்ற பேரவை மாநில தலைவர் தங்க தமிழ்ச்செல்வன், பனங்காட்டுப்படை கட்சி அமைப்பு செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்ட சமுதாயத் தலைவர்கள் சிறப்புரை வழங்க உள்ளனர்
இதனை தொடர்ந்து மாநாட்டில் தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரிய உறுப்பினரும், புதிய திராவிட கழக நிறுவனரும், கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்க பொதுச் செயலாளருமான கே.எஸ்.ராஜ் கவுண்டர் அரசியல் வீர எழுச்சி உரையாற்ற உள்ளார். இறுதியாக மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் எம்.ராஜேஷ் நன்றி கூறுகிறார். இம்மாநாட்டில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்காணோர் கலந்து கொள்ள உள்ளனர் இம்மாநாட்டில் கொங்குநாட்டின் பூர்வீக குடிமக்களே, வேட்டுவக்கவுண்டர் இன வேங்கைகள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரிய உறுப்பினரும், புதிய திராவிட கழக நிறுவனரும், கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்க பொதுச் செயலாளருமான கே.எஸ்.ராஜ் கவுண்டர் அழைப்பு விடுத்துள்ளார்.