ரயில் நிலையங்களில் மோடி உணவகம் - தமிழிசை சௌந்தரராஜன்
ரயில் நிலையங்களில் மோடி உணவகம் திறக்கப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-16 14:46 GMT
தமிழிசை சவுந்தரராஜன்
தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடும்படியாக அம்மா உணவகம் போல ரயில் நிலையங்களில் மோடி உணவகம் அமைக்கப்படும், கோயம்பேடு மார்கெட் வளாகத்தை மாற்ற முயற்சித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,
சென்னை கடலூர் இடையே கப்பல் போக்குவரத்து கொண்டுவரப்படும் என அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.