நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

Update: 2023-12-20 17:27 GMT

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சியின் மாவட்ட அவை தலைவர் நடன சபாபதி தலைமையில் திருச்செங்கோடு பரமத்தி வேலூர் சாலையில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகம் தளபதியார் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், நகர அமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுரா செந்தில் பங்கேற்று பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றிகரமாக மாநாட்டை நடத்திடும் வகையில் ஏற்பாடுகளை முழு வீட்டில் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் நீட் விலக்கு கையெழுத்து அதிக அளவில் மேற்கு மாவட்டத்திலிருந்து நாம் பெற்றுத் தந்துள்ளோம். தொடர்ந்து கட்சி பணிகளை முழுமையாக மேற்கொண்டு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த செயற்குழுக் கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பொறுப்பாளர்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News