எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவை புகழ்ந்த பிரதமர் மோடி
தமிழ்நாடு வந்ததும் எம்.ஜி.ஆர் என் நினைவுக்கு வந்தார். அவர் பிறந்த ஊருக்கு சென்று அங்குள்ள மக்களிடம் நான் பேசியிருக்கிறேன். தரமான கல்வி , சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர் கொடுத்துள்ளார். அதனால் தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக்கொண்டனர்.எம்.ஜி.ஆர் க்கு பிறகு அம்மையார் ஜெயலலிதா மட்டுமே சிறப்பான ஆட்சியை கொடுத்தார். அவருடன் பல ஆண்டுகள் ஒன்றாக பழகிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்.
பல்லடம் வருவதும் , உங்களுடன் இருப்பதும் பாக்கியம். தமிழ்நாட்டின் கொங்கு பகுதி இந்தியாவின் வளர்ச்சியிலும் பல்வேறு வகைகளில் உதவுகிறது. இந்தியாவின் தலைசிறந்த பின்னலாடை நகரம் அமைந்திருக்கும் பகுதி. தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி அடைந்த பகுதி இது. மக்கள் கூட்டத்தை பார்த்தால் காவிக்கடலை கண்டது போல இருக்கிறது. வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
டெல்லியில் ஏ.சி ரூமில் உட்கார்ந்து கொண்டு தமிழகத்தை பார்க்கிறார்கள். ஆனால் இங்கு தமிழகம் கொளுத்தும் வெயிலிலும் தேசியத்தின் பக்கம் நிற்கிறார்கள் . இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். தமிழகம் என்றும் தேசியம் பக்கம் உள்ளதை இந்த கூட்டம் நிரூபித்து கொண்டிருக்கிறது. தமிழகம் இந்தியாவின் முதல் மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. 2024 தேர்தலில் அதிகம் பேசப்படுவது பாஜக2024 தமிழ்நாடு புதிய சரித்திரம் படைக்க உள்ளது. அதற்கு சான்றாக இன்றைய மாநாடு உள்ளத். வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய ஆதரவை கொடுத்துள்ளீர்கள். என் மண் என் மக்கள் என்ற பெயரே சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு பாஜக தொண்டனும் மண்ணும் மக்களும் தான் முக்கியம் என கருதுகிறார்கள்.
இந்த யாத்திரையை தலைமை தாங்கி நடத்திய அண்ணாமலைக்கு வாழ்த்துகள். அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கி தான் இந்த யாத்திரையை அண்ணாமலை நடத்தியுள்ளார். தமிழ் மொழியும் பண்பாடும் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. எனது தொகுதியில் காசி தமிழ் சங்கம் அமைத்த போது கூட என்ன தமிழுக்காக இத்தனை செய்கிறீர்கள் என என்னிடம் கேட்டனர். இந்த நாட்டின் உயர்ந்த இடமான நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்தேன். தமிழ்நாட்டிற்கும் எனக்கும் அரசியல் ரீதியான உறவு மட்டும் அல்ல. இதயத்திற்கு நெருக்கமான உறவும் உள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்னதாக கன்னியாகுமரி துவங்கி காஷ்மீர் வரை ஏக்தா என்ற யாத்திரை நடந்தன.
அப்போது காஷ்மீரில் லால்சவுக் என்ற பகுதீய்ல் நாட்டின் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் , காஷ்மீரின் 370 சட்டம் ரத்து செய்ய வேண்டும் என்ற 2 கனவு இருந்தனர். இப்போது நிரந்தரமாக கொடி தேசிய கொடி பறக்கின்றது. 370 சட்டமும் குப்பையில் கிடக்கின்றது. தமிழகத்தில் பாஜக எப்போதும் ஆட்சியில் இருந்ததில்லை ஆனால் தமிழகம் பாஜகவின் இதயத்தில் உள்ளது. தமிழக மக்கள் அதை புரிந்து கொண்டிருக்கிறார்கள் . அதனால் மக்களிடம் பொய்யை சொல்லி அவர்கள் நாற்காலிகளை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள் . அவர்களின் கபட நாடகம் இப்போது வெளியே வந்துவிட்டது. அவர்கள் செய்த ஊழலும் கூட அதனால் தான் தமிழகத்தில் பாஜகவின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.
2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தனர். அப்போது காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு செய்த நன்மைகளை விட , பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் அதிக நன்மைகளை செய்துள்ளது. திமுக காங்கிரஸ் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழைகள் குறைந்து இப்போது வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளனர். 40 லட்சம் பெண்களுக்கு இலவச சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 6 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மோடி உத்தவாதம் என்பது இன்னும் பல ஆண்டுகளுகு தொடரும். தமிழ்நாடு வந்ததும் எம்.ஜி.ஆர் என் நினைவுக்கு வந்தார். அவர் பிறந்த ஊருக்கு சென்று அங்குள்ள மக்களிடம் நான் பேசியிருக்கிறேன். தரமான கல்வி , சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர் கொடுத்துள்ளார். அதனால் தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் துரதிர்ஷடவசமாக திமுக ஆட்சியில் எம்.ஜி.ஆரை கேவலப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் க்கு பிறகு அம்மையார் ஜெயலலிதா மட்டுமே சிறப்பான ஆட்சியை கொடுத்தார். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக மட்டுமே ஜெயலலிதா அவருடைய வாழ்வை ஒப்படைத்தார். அவ்ருடன் பல ஆண்டுகள் ஒன்றாக பழகிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. நாடு எப்படி வளர்கிறதோ அதே வேகத்தில் தமிழகமும் வளரும் என்ற உத்தரவாதத்தை மோடி உத்தரவாதத்தின் மூலம் என்னால் சொல்ல முடியும். ராணுவ தளவாட உற்பத்தியில் தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. ஜவுளி உற்பத்தி துறைக்கும் முக்கியத்தும் அளிக்கப்படுகிறது.
இந்தியா கூட்டணி என்று உள்ளது. அவர்கள் தமிழகத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள். அப்படி நடந்து விட்டால் தமிழகத்தில் வளர்ச்சி என்ற ஒன்று இருக்கவே இருக்காது. பாதுகாப்பு உபகரணங்களில் கூட லஞ்சம் வாங்கிய காங்கிரஸ் கட்சி , தமிழகத்தில் உபகரண தொழிற்சாலையை அனுமதிப்பார்களா ? தமிழகத்தில் 20 ஆயிரம் கோடி அளவிற்கான ஜவுளி பூங்கா திட்டம் வந்துள்ளது. அதன் மூலம் லட்சகணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். முத்ரா லோன் மூலம் பல லட்சம் பேருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் சாத்தியம் ஆகுமா என நீங்களே யோசித்து பார்க்கவேண்டும்.
புதிய பாரதத்தை உருவாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறோம். வளர்ச்சி , பெண்கள் வளர்ச்சி , விவசாய வளர்ச்சி போன்றவைகளை நான் கொடுத்துவருகிறேன். ஆனால் இதையெல்லாம் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியினரால் பொறுத்துகொள்ள முடியவில்லை. தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே இவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். அவர்கள் கொள்ளை கஞையை பூட்ட வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது. மத்தியில் உருவாகியிருக்கும் இந்தியா கூட்டணியால் டெல்லியில் வெற்றி பெற முடியாது என அவர்களுக்கு தெரிந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் அவர்கள் கொள்ளையடிக்கும் கடையை நாம் பூட்டியாக வேண்டும். அதனால் தான் நாம் நடத்தியுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை என்ற பூட்டை நாம் உருவாக்கியுள்ளோம். ஊழலலுக்கு முற்றூப்புள்ளி வைக்க தமிழகம் மக்கள் தயாராகிவிட்டனர். 3 வது முறையாக நல்ல ஆட்சி அமைய வீடு வீடாக செல்ல வேண்டும். மக்களின் ஆதரவை பெற வேண்டும். இளைஞர்களுக்கான உத்தரவாதம் எப்பொழுதும் இருக்கும். என பேசினார்.