நாமக்கல்லில் திமுக சார்பில் கவிதை, வசனங்கள் போட்டி

நாமக்கல்லில் திமுக சார்பில் கவிதை, வசனங்கள் ஒப்பித்தல் போட்டி

Update: 2023-11-26 15:29 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு கவிதை மற்றும் திரைப்பட வசனங்கள் ஒப்பித்தல் போட்டி நடைபெற உள்ளது. நாமக்கல் உழவர்சந்தை எதிரில் உள்ள கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நாளை 28.11.2023 செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவா் கே.அய்யாவு வரவேற்கிறார். துணை அமைப்பாளர்கள் டி.அருள், வே.பிரபு, எஸ்.பூபாலன், சி.ஜெயக்குமார். செ.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனா். மாவட்ட அமைப்பாளா் இரா.குமரவேல் தலைமை தாங்குகிறார். மாநில துணைச் செயலாளரும், மண்டலப் பொறுப்பாளருமான திருச்சி செ.எழில்மாறன் செல்வேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினா்கள் கே.பொன்னுசாமி, பெ.இராமலிங்கம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனா். இறுதியாக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளர் இரா.மேகநாதன் நன்றி கூறுகிறார். போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000/-, இரண்டாம் பரிசாக ரூ. 3,000/-, மூன்றாம் பரிசாக ரூ. 2,000/- வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News