பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா நடைபெற்றது
திமுக மூத்த முன்னோடி மறைந்த பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது;
By : King 24x7 Website
Update: 2023-12-19 16:26 GMT
திமுக மூத்த முன்னோடி மறைந்த பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில், அமைந்துள்ள திமுக நகர அலுவலகத்தில்,, திமுக முன்னோடியும் பேராசிரியருமான அன்பழகன் அவர்களின் 102-வது பிறந்தநாள் விழா கடைப்பிடிக்கப்பட்டது .இந்த நிகழ்வில் திமுக நகரச் செயலாளர் அ.குமார் தலைமையில்,பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர், மோ.செல்வராஜ், துணைத் தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக கழக முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேராசிரியர் அவர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...