தமிழகத்தில் மாவட்ட வாரியாக பதிவான வாக்கு விவரங்கள் வெளியீடு
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பதிவான வாக்கு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-04-19 14:34 GMT
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு காலையில் விறுவிறுப்பாகவும் பிற்பகலில் மந்தமாகவும் மாலையில் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.
சில இடங்களில் வெயிலின் காரணமாக மக்கள் வாக்களிக்க தயக்கம் காட்டினர். இருப்பினும் மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் மாவட்ட வாரியாக வாக்கு விவரங்கள் வெளியாகி உள்ளது. இதில் கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் இருந்தது.