பாபநாசத்தில் ரயில் மறியல் போராட்டம் : 45 பேர் கைது
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசத்தில் ரெயில் மறியல் போராட்டம் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மத்திய அரசு டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேச மறுப்பதை கண்டித்தும், கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிரந்தர சட்டத்தை அமல்படுத்த கோரயும்,
எம்.எஸ்.சுவாமி நாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த சமயம் திடீரென இரண்டு விவசாயிகள் ரயில்வே தண்டவாளத்தில் இறங்க முயற்சித்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது