உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-03-06 13:24 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 

அமலாக்கத் துறை வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய இருப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையின் போது தகவல் தெரிவிக்கப்பட்டது, மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கவும் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கௌதம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை  மார்ச் 11க்கு நீதிபதி எஸ்.அல்லி ஒத்தி வைத்தார்.
Tags:    

Similar News