புதிய கல்வி கொள்கை; சபாநாயகர் அப்பாவு விமர்சனம்!!

புதிய கல்வி கொள்கையை சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.;

Update: 2025-02-21 09:59 GMT

appavu

தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் புதிய கல்வி கொள்கை குறித்து விமர்சித்தார். இதுகுறித்து அப்பாவு பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கல்வி கொள்கையை அரசியலாக்கவில்லை. அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என கொண்டு வந்த திட்டத்திற்கான நிதியை நிறுத்தி மத்திய அரசு அரசியல் செய்கிறது. 2022ம் ஆண்டு புதிய கல்வி கொள்கையை ஏற்ற பீகாரில் தற்போதைய கணக்கெடுப்பு படி பள்ளி வருகை 51 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக குறைந்துள்ளது. பீகாரில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியதால் பள்ளிக்கு மாணவர்கள் வருகை 20 சதவீதம் குறைந்துள்ளது. சாமானிய ஏழை பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் புதிய கல்வி கொள்கை. இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காக வே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News