கரூரில் "இணைந்து எழு" குழு கூட்டம் - எம்.பி தேர்வு.

கரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இணைந்து எழு" குழு கூட்டத்தில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தேர்வு

Update: 2023-11-26 12:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற"இணைந்து எழு" குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஆதரவாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பேங்க் சுப்ரமணியன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கரூர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இணைந்து எழு குழுக்களின் ஆலோசகராக தேர்வுசெய்தனர். மேலும் ,துணை அமைப்பாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில் "இணைந்து எழு" தமிழ்நாடு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் மேரி லில்லி ஆகியோர் சென்னையில் இருந்து வந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்தியா கூட்டணி அமைப்பில் உள்ள பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News