ICU வில் இருக்கும் நெசவு தொழில் - பிரேமலதா விஜயகாந்த்
Update: 2024-12-14 10:58 GMT
இன்று சேலம் இளம்பிள்ளையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் நெசவுத்தொழில் குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார் அழிந்து வரும் தொழிலாக நெசவுத்தொழில் இருக்கிறது, நெசவுத் தொழிலாளர்கள் தன் வாழ்வாதாரத்தை இழந்தும் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தலில் எனக்கும் உடன்பாடு இல்லை எனவும் அணைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் எனக்கும் எந்தவித எதிர்ப்பும் இல்லை எனவும் திரு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பின்னர் ஈ,வி,கே,எஸ் இளங்கோவன் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் போல தான் திரு ஈ,வி,கே,எஸ் இளங்கோவானும் அவருடைய கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் தெரிவிப்பதில் சிறந்து விளங்கியவர் , அவருடைய இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாதவை !