இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்
திருப்பூர் இளைஞரணிசெயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
By : King 24x7 Website
Update: 2023-12-03 09:52 GMT
பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பறி கொடுக்கப்பட்ட தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவே திமுக இளைஞரணியின் சேலத்தில் நடைபெற உள்ள மாநில உரிமை மீட்பு மாநாடு என திருப்பூரில் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியில் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பாக இரண்டு கோடியே 28 லட்ச ரூபாய் மாநாட்டு நிதியாக உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் திராவிட இயக்கத்தின் திருப்பு முனை ஏற்படுத்திய மாவட்டம் எனவும் பேரறிஞர் அண்ணாவும் பெரியாரும் சந்தித்துக் கொண்ட முதல் இடம் திருப்பூர் எனவும் பேசினார். பின்னலாடை உற்பத்தி நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில்தான் சேலம் மாநாட்டிற்காக நான்கு லட்சம் டி-ஷர்ட்டுகள் ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் பேசினார் . திமுகவில் உழைத்தவர்களுக்கே உயர் பதவி என்ற வார்த்தைக்கு உதாரணம் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும் அது போல் அனைவரும் வெற்றிக்கு உழைத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலத்தில் எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளது. ஆனால் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் மத்திய அரசு ஏதேனும் செய்ததா என்பதை நினைவில் படுத்திக் கொள்ளுங்கள். ஒன்றிய அரசின் பிரதமர் மோடி தற்போது எங்கு சென்றாலும் என்னைப் பற்றி பேசி வருகிறார். சென்னையில் ஒரு மாநாட்டில் நான் பேசாததை பேசியதாக பொய் பரப்பி வருகிறார் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்னை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார்கள் ஆனால் நான் மன்னிப்பு கேட்க போவதில்லை , கலைஞரின் பேரன் , ஸ்டாலினின் மகன் நான் சமூக நீதியை தான் பேசினேன். ஒன்றிய அரசு செய்த ஊழல் முறைகேடுகளை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரையில் நடந்த மாநாடு நினைவில் இருக்கும் , எதற்காக அந்த மாநாடு நடைபெற்றது என அந்த கட்சியின் தலைவர்களுக்கே தெரியாமல் குத்தாட்டம், மிமிக்ரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதே தவிர கட்சியின் கொள்கைகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை மாறாக தொலைக்காட்சிகளில் அவர்கள் வழங்கிய சாப்பாடு குறித்த விவாதம் நடைபெறும் சூழலுக்கு சென்றது. ஆனால் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் மாநாடு என்பது ஒரு எழுச்சி மாநாடாக அமைய வேண்டும். அது திமுகவின் கொள்கைகளை பறைசாற்றும் வகையில் அமையும். 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி எவ்வாறு தோற்கடிக்கப்பட்டதோ அதேபோன்ற 2024 ஆம் ஆண்டு மத்தியில் ஆளக்கூடிய ஒன்றிய அரசை விரட்டி துரத்தக்கூடிய வகையில் இளைஞர் அணியின் மாநாடு அமையும் எனவும், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பறி கொடுக்கப்பட்ட தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவே திமுக இளைஞரணியின் சேலம் மாநாடு எனவும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என உரையாற்றினார்.