விரைவில் துணை முதல்வராகும் உதயநிதி? முதலில் இருந்து ஆரம்பிக்கும் ஸ்டாலின்!

Update: 2024-08-02 00:30 GMT
விரைவில் துணை முதல்வராகும் உதயநிதி? முதலில் இருந்து ஆரம்பிக்கும் ஸ்டாலின்!

உதயநிதி

  • whatsapp icon

தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம். வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

போக்குவரத்து துறை, மின்சார, அமலாக்கத்துறை ஆகியவை மாற்றம், உள்ளாட்சி துறை மாற்றம், விளையாட்டு துறை மாற்றம்.. ஆகிய துறைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

உதயநிதியை துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார்.

Tags:    

Similar News