கட்சியை முன்னிலை படுத்தியதால் கிடைத்த வெற்றி - பாஜக அண்ணாமலை பேட்டி.
கட்சியை முன்னிலை படுத்தியதால் கிடைத்த வெற்றி - அண்ணாமலை பேட்டி.
By : King 24x7 Website
Update: 2023-12-03 16:23 GMT
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் வந்திருந்தார். இன்று மாலை நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- "பாஜகவுக்கு இன்று அற்புதமான நாள் இன்று. 4 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாஜக வரலாறு படைத்திருக்கிறது. இது 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம்தான். இந்தியா கூட்டணிக்கு பிறகு நடந்த தேர்தல் இது. இந்த மாநிலங்களில் முதல்வர் முகம் இல்லாமல், முதல்வர் வேட்பாளரை முன்னிலை படுத்தாமல் கட்சியை முன்னிலைப்படுத்தி மோடி கேரண்டி வாக்குறுதி மூலம் வெற்றிபெற்றுள்ளோம். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இரவு முழுவதும் ரெய்டு நடத்தினார்கள். அங்கித்திவாரியை தவிர்த்து வேறு சில வழக்குகள் சம்பந்தமான ஃபைல்களை அவர்கள் எடுத்துள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் மிக முக்கியமான கேஸ் ஃபைல்கள், இன்பார்மஸின் பெயர்கள் உள்ளன. எனவே அங்கு நடந்தது குறித்து டி.ஜி.பி அறிக்கையாக சொல்ல வேண்டும். தமிழக சபாநாயகர் அப்பாவு இடைத்தரகர்போல் செயல்படுகிறார். அவர் எப்படி சபையை நடத்துகிறார்?. இடைத்தரகர் என்ற வார்த்தையை சொல்ல தமிழ்நாட்டில் ஒருவருக்கு தகுதி இல்லை என்றால் அது சபாநாயகர் அப்பாவுதான். இவ்வாறு கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.