மக்களை குடிக்க வைக்க இலக்கு நிர்ணியப்பதில்லை - அமைச்சர் முத்துசாமி

பொதுமக்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக விற்பனை இலக்கு நிர்ணியப்பதில்லை, குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Update: 2024-01-07 02:18 GMT

அமைச்சர் முத்துசாமி

ஈரோடு தெற்குப்பள்ளத்தில் புதிய பாலம் கட்டும் பணியை தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு , ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி , பொதுமக்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இலக்கு நிர்ணியப்பதில்லை என்றும் குடிப்பவரகள் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதற்காகவே ஒரு முயற்சியை தவிர விற்பனை உயர்த்த வேண்டும் என்பது நோக்கமல்ல என்றும் , தவறான வழியில் செல்கிறார்களா என்பதை கண்காணிக்கவே ஒரு முயற்சி என்றார். மேலும் குடிப்பழக்கத்திலிருந்து வெளியே கொண்டுவதற்கு கவுன்சிலிங் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசின் சார்பில் செயல்படுத்தப்படுகிறது என்ற அமைச்சர் சு.முத்துசாமி , கள் விற்பனைக்கு அனுமதி என்பது ஆய்வு செய்து செய்ய வேண்டிய பணி என்றார். மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கும் நபர்கள் மீது கைது , சஸ்பெண்ட் நடவடிக்கை என செயது வருவதாகவும் , இதை உள்துறை செயலாளர் கண்காணித்து வருகிறார் என்றார்.தொடர் நடவடிக்கைகளால் கூடுதல் விலைக்கு மது விற்பது 99% தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
Tags:    

Similar News