கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்; சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சோதனை தீவிரம்!!

Update: 2024-11-09 12:18 GMT

கொடைக்கானல் 

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெறுகிறது. கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கிறது. நகர கூட முடியாமல் நீண்ட நேரமாக சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர். விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

Similar News