அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
By : King 24x7 Desk
Update: 2025-03-13 10:24 GMT
tn budget
பட்ஜெட்டை முன்னிட்டு எல்லார்க்கும் எல்லாம் என வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டு பட்ஜெட்டில் தேவநாகரி எழுத்துருவான ‘₹’ குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ‘ரூ’ என பதிவிட்டுள்ளார். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் “எல்லார்க்கும் எல்லாம்” என குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.