தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகவே அரசு இருக்கிறது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம்!!
By : King 24x7 Desk
Update: 2025-08-12 06:26 GMT
Chennai Highcourt
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. பணியாளர்களுக்கு ஆதரவாகவே அரசு இருக்கிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. போராட்டம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்ய, தினந்தோறும் முறையீடு செய்ய வேண்டாம், மனுவாக தாக்கல் செய்தால் பின்பு விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.