சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை!!

Update: 2025-12-02 02:59 GMT

rain

சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஆலந்தூரில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் பல மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News