அதிமுக-பாஜக கூட்டணியில் யாரும் சேரவில்லை: துணை முதல்வர் உதயநிதி
By : King 24x7 Desk
Update: 2025-12-05 04:08 GMT
அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து 8 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தக் கட்சியும் அக்கூட்டணியை நம்பி போகவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அமித்ஷாவை யார் பாராட்டிப் பேசுவது என்பதுதான் அதிமுக அணிகளுக்கு இருக்கும் ஒற்றுமை. வெறுப்பு அரசியல் செய்யும் அதிமுக - பாஜக கூட்டணியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.