சீமான் மீது சென்னையில் மேலும் 3 வழக்குகள் பதிவு!!

Update: 2025-01-11 09:17 GMT

சீமான் 

பெரியாரை கடுமையாக விமர்சித்ததால் சீமானுக்கு எதிராக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது. இதுவரை சீமான் மீது 62 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னையில் மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிட கழகம், திராவிட விடுதலைக்கழகம், வீரலட்சுமி ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு சைபர் கிரைம், மேற்கு சைபர் கிரைம், சிசிபி ஆகிய இடங்களில் அளிக்கப்பட்ட புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News